our Facilities
About
தனித்தமிழ் மருத்துவம் புனித ராவணர் அவர்களால் உலக தமிழினத்திற்காக மட்டுமல்ல அனைத்து மனித குல நலனுக்காகவும் தூய தமிழில் இயற்றிய உன்னத அறிவியல் அடங்கிய சிந்தாமணி மருத்துவம் ஆகும்.
தமிழ் மருத்துவ தொக்கண முறையானது தனித்தமிழ் சிந்தாமணி மருத்துவத்தின் வர்ம மருத்துவத்தில் உள்ள மர்ம காய அடங்கல் முறைகள் மற்றும் நோய் தீர்க்கும் தொடுவர்ம சிகிச்சை நோய் நீக்கும் தட்டு வர்ம சிகிச்சை முதுகெலும்பு நேர்த்தி ஆகியவற்றை பயன்படுத்தாமலேயே பினியுற்றோருக்கு பரிகாரம் அளிக்கும் மாறுபட்ட தமிழ் மருத்துவ முறையாகும்.
சிந்தாமணி மருத்துவத்தின் பரிகார செயல்முறைகளை நோய் பாதிப்பின் தாக்கத்துக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்தி பிணியாளிகளின் துயர் துடைக்க வேண்டி செய்யப்படும் சிகிச்சை முறையே தொக்கன மருத்துவம் ஆகும் ராவணர் இயற்றிய தமிழ் சிந்தாமணி மருத்துவம் உலக மக்களின் நலன் காக்க தனித்தமிழில் இராவணரால் இயற்றப்பட்டது.
இது உடலுக்கு மனதிற்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது மறுபக்கம் ரத்த ஓட்டம் சீராகி உடல் எடை குறைந்து மெய்பாரம் நீங்கி உடல் இலகுவாகிறது.